Posts

Showing posts from January, 2025

அறிவியல் துணுக்குகள் பகுதி-2

வெள்ளிக் கிரகம் வெள்ளிக் கிரகம்  (venus) ஒரு முறை சுழல 243 நாட்கள் பிடிக்கும். ஆனால், அது சூரியனைச் சுற்றி வர 225 நாட்களே பிடிக்கும். அதாவது, வெள்ளிக் கிரகத்தில் ஒரு ஆண்டு பூமியின் 225 நாட்கள். மேலும், பூமி சுழல்வதைக் காட்டிலும், வெள்ளி எதிர் திசையில் சுழலும். அதாவது நாம் வெள்ளிக் கிரகத்தில் இருந்தோமானால், சூரியன் மேற்கில் உதித்து கிழக்கில் மறையும். புதன், செவ்வாய் கிரகங்களைப் போலன்றி, பூமி போல், வெள்ளிக் கிரகத்திலும் காற்று மண்டலம் உள்ளது. அதில் 96% கரிம வாயு. இவ்வாயு கடும் பசுமைக்குடில் விளைவைக் கொண்டுள்ளதால், வெள்ளிக் கிரகம் மிகவும் வெப்பம் வாய்ந்ததாகும். அதன் பரப்பில் 450 C க்கும் அதிகமான வெப்பம் நிலவுகிறது. பூமியின் பெரும்பான்மையான கரிம வாயு கடல்களில் முடங்கி கிடக்கிறது. ஆனால் மனிதர்களின் எரிபொருள் பயன்பாட்டால், பெருமளவில் கரிம வாயு வெளியாகி, பூமியும் அதிக வெப்பம் அடைந்து கொண்டு வருகிறது. பூமி வெள்ளிக் கிரகம் போன்ற நரகமாக மாறாதிருப்பது, மனிதர் கையிலேயே உள்ளது.   ___________________________________________________________________________________  ஒளி வேகமும் காலச...

அறிவியல் துணுக்குகள் பகுதி-1

ஜேம்ஸ் வெப்பின் அகச்சிவப்புக் கண்கள் விண்வெளித் தொலைநோக்கிகள் அண்டத்தின் விந்தைகளைக் காண பெரிதும் உதவுகின்றன. நாம் பூமியில் எத்தனை பெரிய தொலைநோக்கிகள் வடிவமைத்தாலும், காற்று மண்டலத்தின் மேகம், துசு, ஒளிச்சிதறல் ஆகியவை விண்வெளித் திரையில் களங்கம் ஏற்படுத்தி விடுகின்றன. எத்தனை சிறந்த கண்கள் இருப்பினும், கண்ணாடி பழுதானால் காட்சி கெட்டுவிடும். காற்று மண்டலம் என்னும் கண்ணாடியை அகற்றவும் இயலாது. ஆனால் தொழில்நுட்பம் கொண்டு, கண்களை கண்ணாடிக்கப்பால் நகற்றி நிறுத்த முடியும். சமீபத்தில் அப்படி நிறுத்தப்பட்ட ஒரு கண்தான் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி. இதற்கு முன் நாம் காணாத அண்டசராசரத்தின் அரிய காட்சிகளை நமக்குக் காண்பித்தது, புகழ்பெற்ற ஹப்புல் தொலைநோக்கியாகும். ஹப்புல் தொலைநோக்கியின் கண், நாம் நமது இயற்கைக் கண்களினால் அன்றாடம் காணும் ஏழு வண்ண ஒளியைக் காண வடிவமைக்கப்பட்டது. ஜேம்ஸ் வெப்பின் கண்ணோ நாம் இயற்கைக் கண்கள் கொண்டு காணமுடியாத அகச்சிவப்புக் கதிர் ஒளியைக் காண வடிவமைக்கப்பட்டது. ஏன் அகச்சிவப்பு? இதன் பதில் மிக ஆழமானது. அண்டத்தின் அயரா விண்வெளிவிரிவு சம்பந்தப்பட்டது. ஒரு விண்மீனோ, விண்திறளோ நமக்கு தொல...