அறிவியல் துணுக்குகள் பகுதி-2
வெள்ளிக் கிரகம் வெள்ளிக் கிரகம் (venus) ஒரு முறை சுழல 243 நாட்கள் பிடிக்கும். ஆனால், அது சூரியனைச் சுற்றி வர 225 நாட்களே பிடிக்கும். அதாவது, வெள்ளிக் கிரகத்தில் ஒரு ஆண்டு பூமியின் 225 நாட்கள். மேலும், பூமி சுழல்வதைக் காட்டிலும், வெள்ளி எதிர் திசையில் சுழலும். அதாவது நாம் வெள்ளிக் கிரகத்தில் இருந்தோமானால், சூரியன் மேற்கில் உதித்து கிழக்கில் மறையும். புதன், செவ்வாய் கிரகங்களைப் போலன்றி, பூமி போல், வெள்ளிக் கிரகத்திலும் காற்று மண்டலம் உள்ளது. அதில் 96% கரிம வாயு. இவ்வாயு கடும் பசுமைக்குடில் விளைவைக் கொண்டுள்ளதால், வெள்ளிக் கிரகம் மிகவும் வெப்பம் வாய்ந்ததாகும். அதன் பரப்பில் 450 C க்கும் அதிகமான வெப்பம் நிலவுகிறது. பூமியின் பெரும்பான்மையான கரிம வாயு கடல்களில் முடங்கி கிடக்கிறது. ஆனால் மனிதர்களின் எரிபொருள் பயன்பாட்டால், பெருமளவில் கரிம வாயு வெளியாகி, பூமியும் அதிக வெப்பம் அடைந்து கொண்டு வருகிறது. பூமி வெள்ளிக் கிரகம் போன்ற நரகமாக மாறாதிருப்பது, மனிதர் கையிலேயே உள்ளது. ___________________________________________________________________________________ ஒளி வேகமும் காலச...